தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி: மணப்பெண் மாயம்

 போலீஸ் செய்தி: மணப்பெண் மாயம்

 போலீஸ் செய்தி: மணப்பெண் மாயம்


ADDED : ஏப் 18, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே என்.புதுாரை சேர்ந்தவர் அழகர்சாமி. மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுவிதா 21, நர்சிங் படித்து விட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பயிற்சியில் இருந்துள்ளார்.. இவருக்கும் இவரது அத்தை மகனுக்கும் திருமணம் ஏப். 29ல் நடக்க இருந்தது. இந்நிலையில் ராஜபாளையம் சென்று வருவதாக சொல்லிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. கீழ ராஜகுலராமன் போலீசார் தேடுகின்றனர்.

மது பாட்டில் கடத்தல்

ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கில் தெற்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அட்டை பெட்டிகளை ஏற்றி வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோத விற்பனைக்காக 192 டாஸ்மாக் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.

சொக்கர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் 33, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us