மனைவி மாயம் கணவன் புகார்
சாத்துார்: சாத்துார் க.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜலட்சுமி 42. இவர் க.சத்திரப்பட்டி வஸ்த்ரா கல்லுாரியில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவர் கணவர் சுந்தரராஜன், 50. வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஏப்.14 மனைவியை அலைபேசியில் அழைத்த ஆசிரியர் டாட்டா பை பை என சொல்லிவிட்டு மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சாத்துார்: சாத்துார் கணஞ் சாம் பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 49.இவர் மனைவி காளீஸ்வரி ,48.இருவரும்பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். மார்ச் 30ல் மளிகை கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற காளீஸ்வரி மாயமானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம்
சாத்துார்: சாத்துார் பாரதி நகரை சேர்ந்தவர் நிர்மலா தேவி, 39. இவரது 2வது மகள் சிவசங்கரி பிளஸ் 1 படித்துள்ளார். ஏப்ரல் 15வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மர்ம சாவு
சாத்துார்: சாத்துார் திருவிருந்தான் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு இவர் மனைவி உமா மகேஸ்வரி, 40.இருவருக்கும் திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லை. நேற்று முன்தினம் உமா மகேஸ்வரி உடல் கருகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது சகோதரர் பேரையூர் செல்லச்சாமி,65.தன் தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.