நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் மீது டூவீலர் மோதி ஒருவர் பலி
சாத்துார்: சாத்துார் இரவார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் 46. சிவகாசி அருகில் உள்ள 5 ஹில்ஸ் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஆக. 5ல் வேலை முடித்து விட்டு இரவு 8:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார். மடத்துப்பட்டி அருகில் வந்த போது ரோட்டில் குறுக்காக ஓடிவந்த நாய் மீது டூவீலர் மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் தலையில் படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.