மரத்தடியில் பட்டாசுதயாரித்தவர் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செல்லையாநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் காளிராஜ் 39, வாசுகுமார். இருவரும் இருளம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு தயாரிப்பு ஆலை அருகே நேற்று விடுமுறை நாளில் அனுமதியின்றி மரத்தடியில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் காளிராஜை கைது செய்து, வாசுகுமார் மீது வழக்கு பதிந்தனர்.
..............................
பட்டாசு பறிமுதல்
திருத்தங்கல்:
பாண்டியன் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி 25 இவர் அரசு அனுமதியின்றி பேரா பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான பட்டாசு கடை அருகே தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.3000 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
* திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 29. இவர் தனது வீட்டின் அருகே தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 10 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
*சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து 41. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.10 ஆயிரத்து 500 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
.............................
பட்டாசு தயாரிப்பு
4 பேர் மீது வழக்கு
சாத்துார்:
வெம்பக்கோட்டை வி.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் 40. வி.மீனாட்சிபுரம் காளிராஜ் 39, ஆகியோர் லோடு ஆட்டோவில் உரிய அனுமதி இன்றி பட்டாசு திரி ஏற்றி சென்றனர். போலீசார் பட்டாசு திரியுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தாயில்பட்டியில் மேரி என்பவருக்கு சொந்தமான கோடவுனில் அரசு அனுமதியின்றி சிவகாசியை சேர்ந்த சஞ்சிவி 39. பேன்சி ரக பட்டாசு தயாரித்தார் போலீசாரை கண்டதும் தப்பியோடினார்.
போலீசார் பட்டாசு, மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால்,50. உரிமம் இன்றி இவருக்கு சொந்தமான வீட்டில் தகர செட் அமைத்து பேன்சிரக பட்டாசுகள், சரவெடிகள், லட்சுமி வெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தார். போலீசாரை கண்டதும் தப்பினார். பட்டாசுகளை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.