மதுபாட்டில்கள் பறிமுதல்
சாத்துார்: சாத்துார் நாடார் கீழ தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து 43, வீட்டில் வைத்தும் சத்திரப்பட்டி தங்கவேல் 60, அண்ணா நகரில் வைத்தும் 180 மி.லி., அளவு கொண்ட தலா 28 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சாத்துார்: சாத்துார் ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 69. இவருக்கு சொந்தமான ஸ்ரீ பொன்சாஸ்தா பயர் ஒர்க்ஸ் டைனிங் ஹாலில் அரசு அனுமதி இன்றி ஆபத்தான நிலையில் லட்சுமி வெடி தயாரித்தார். போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போர்மேன் சாத்துார் அஜய் 39. தப்பி ஓடினார். இருவர் மீதும் சாத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
சாத்துார்:- ஆலங்குளம் கோமாளி பட்டியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி மகன் முத்துப் பாண்டி 15. ஆக. 30ல் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது தவறி கிணற்றில் விழுந்ததில் கல்லில் தலைமோதி தண்ணீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.