நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூதாட்டி கைது
சாத்துார்: அப்பைய நாயக்கன்பட்டி ஏ. புதுப் பட்டியை சேர்ந்தவர் சம்சு நிஷா பேகம், 64. இவரது பெட்டிக் கடையில் புகையிலை பாக்கெட் விற்றார். போலீசார் கடையில் இருந்து 11 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சேத்துார்: சேத்தூர் அடுத்த சொக்கநாதன் புத்துார் ராஜேந்திரன் மகன் சிவனேஷ் 20, ஆட்டோ டிரைவர். தந்தை மதுரையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் நிலையில் சிவனேஷ் அதிகமாக அலைபேசி பார்த்துக் கொண்டிருப்பதாக தந்தை சத்தம் போட்டு உள்ளார். இதில் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் சேலையால் துாக்கிட்டு இறந்துள்ளார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.