நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவருக்கு அரிவாள் வெட்டு
சாத்துார்: சாத்துார் வாழ வந்தாள்புரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி, 60. பன்றி வளர்த்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக முத்தால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்ன அய்யனார், பெரிய அய்யனார், மாரிமுத்து, மாரியம்மாள், ஆகியோர் அறிவாளால் தாக்கியதில் மணிக்கட்டில் காயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி பலி
சாத்துார்: சாத்துார் கணபதியா புரத்தைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் 75. செப். 27 கால் வலியால் அவதிப்பட்டவர் வலி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு மயங்கினார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.