/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் செய்தி பட்டாசு தொழிலாளி பலி
/
போலீஸ் செய்தி பட்டாசு தொழிலாளி பலி
ADDED : அக் 16, 2025 05:49 AM
சாத்துார் : வெம்பக்கோட்டை முத்துச்சாமிபுரம் சேர்ந்தவர் காளிமுத்து, 26. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00மணிக்கு எதிர்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார்.எதிரில் சிவகாசியை சேர்ந்த காசிராஜன், 23 .ஒட்டி வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்மோதி முதியவர் பலி
சாத்துார், அக். 16-
சாத்துார் அமீர் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். 65.நேற்று காலை 7:45 மணிக்கு சாத்துார் -கோவில்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அவர் பின்னால் வேகமாக வந்த பள்ளி பஸ் மோதியது சம்பவ இடத்தில் அவர் பலியானார்.பஸ் டிரைவர் விருதுநகர் எட்டநாயக்கன்பட்டி ஆனந்தபாபு ,39 . மீது வழக்கு பதிந்து சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.