வாலிபர் பலி
சாத்துார்: சாத்துார் பாலாஜி நகரை சேர்ந்த மணிராஜ், 34.திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றனர். அக்.25 மதியம் 12:15 மணிக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் பலி
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை இ.ராமநாதபுரம் கோபால்சாமி மனைவி சோலையம்மாள், 34. அக்.20 தீபாவளி அன்று குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது அவர் மீது பட்டாசு விழுந்து சேலையில் தீ பிடித்ததில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அக்.25ல் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி கைது
சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஞானசுந்தரி, 60. நடத்திவரும் பெட்டிக்கடையில் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்: வெற்றிலையூரணி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பாண்டி, 34 . இவர் வீட்டில் வைத்து மதுபானங்கள் விற்றார். அவரது வீட்டில் இருந்து 180 மி.லி அளவு கொண்ட 31 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
* இரவார்பட்டியை சேர்ந்தவர் சங்கையா, 51.மது விற்றார். இவரது வீட்டிலிருந்து 180 மி.லி., அளவு கொண்ட 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

