தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


UPDATED : அக் 05, 2026 10:32 AM

ADDED : அக் 04, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 10:32 AM ADDED : அக் 04, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலை வாங்கி தருவதாக

ரூ.14.15 லட்சம் மோசடி

சாத்துார்:

சாத்துார் வடமலாபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 35. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு தற்போது சொந்த ஊர் திரும்பி உள்ளார். இவரது நண்பர் கோவையை சேர்ந்த குமரேசன், இவரது நண்பர் ஹரிஹரன் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்திற்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் அவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பலாம் என அவர் கூறியதை நம்பி சாத்துார் பகுதியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன், சரவணன், காளிராஜ், சுபாஷ் சந்திரபோஸ், ராம்குமார், நந்தகுமார், பாண்டி செல்வம், விவேக் ஆகிய 8 பேரிடம் பணம் பெற்று ஹரிஹரன் அனுப்பிய வங்கிக் கணக்கிற்கு ரூ 27.15 லட்சம் பணத்தை ராமச்சந்திரன் அனுப்பியுள்ளார். ஆனால் வெளிநாட்டிற்கு செல்ல விசா பெற்று தராமல் ஏமாற்றி வந்த குமரேசன் மற்றும் ஹரிஹரனிடம் பணத்தை திரும்ப ராமச்சந்திரன் கேட்டபோது, அவர்கள் இருவரும் ரூ.13 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளனர். மீதம் ரூ.14.15 லட்சத்தை ராமச்சந்திரன் கேட்டபோது பணத்தை தர முடியாது என கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ்சிலிருந்து விழுந்து முதியவர் பலி

ராஜபாளையம்:

ராஜபாளையம் சொக்கர் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரசு பஸ்சில் இறங்கிய முதியவர் மயங்கி விழுந்தார். ஆம்புலன்சில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கும், திருநெல்வேலிக்கும் கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் முகவூரை சேர்ந்த பாத்திர வியாபாரி மாடசாமி 62, என தெரிந்து இறப்புக்கான காரணம் குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us