/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் செய்திகள்...விருதுநகர்
/
போலீஸ் செய்திகள்...விருதுநகர்
ADDED : ஜன 03, 2026 06:19 AM

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விருதுநகர்: சூலக்கரைமேடைச் சேர்ந்தவர் முருகன் 31. இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று சூலக்கரையில் காலை 11:30 மணிக்கு ஒரு வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் போது இணைப்பு மின் ஒயரில் சுத்தியல் பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு தொந்தரவு: போக்சோவில் கைது
விருதுநகர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரயிலில் அடிபட்டு பலி
விருதுநகர் அல்லம்பட்டி ராஜ்குமார் 30, என தெரிந்தது. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு சாவித்திரி 23, என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றவர், தண்டவாளத்தை கடக்கும் போது மும்பை எக்ஸ்பிரசில் அடிபட்டு இறந்துள்ளார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

