/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'காவலன் செயலி' தினசரி 20 பேருக்கு பதிவிறக்கம் செய்து கொடுக்க இலக்கு முதல்வருக்காக போலீசுக்கும் பணி

ADDED : ஆக 23, 2025 08:16 PM
விருதுநகர்:தமிழக போலீஸ் துறையால் உருவாக்கப்பட்ட 'காவலன் செயலி' குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தினசரி 20 பேருக்கு செயலியை பதிவிறக்கம் செய்து கொடுக்க போலீசாருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேஷன் பணிகளை விடுத்து மக்களை தேடி அலையும் நிலைக்கு போலீசார் ஆளாகியுள்ளனர்.
2019 டிச.ல் தமிழக போலீஸ் துறையால் 'காவலன் செயலி' உருவாக்கப்பட்டது. இச்செயலியில் உறவினர்கள் மூன்று பேரின் அலைபேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும் போது செயலியில் உள்ள சிவப்பு நிறத்திலான 'பட்டனை' அழுத்தினால் ஜி.பி.எஸ்., மூலமாக இடத்திற்கு போலீசார் வந்து விடுவர்.
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அந்தந்த ஸ்டேஷன் எல்கைக்குட்பட்ட பகுதியில் மக்கள் கூடும் இடங்கள், வேலைக்கு சென்று வரும் பெண்களிடம் 'காவலன் செயலி' குறித்து தெரிவித்து ஒரு போலீஸ்காரர் 10 முதல் 20 பேருக்கு செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ஸ்டேஷன் பணிகளை செய்து கொண்டு காலை, மாலை நேரங்களில் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுக்க மக்கள் கூடும் இடங்களை தேடி போலீசார் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டேஷன் பணிகளை செய்ய போதிய ஆட்கள் இல்லை.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முதல்வரின் துறையான போலீஸ் நிர்வாகத்தின் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என பிரசாரம் செய்ய இப்பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக போலீசார் புலம்புகின்றனர்.