ADDED : மார் 06, 2026 05:45 AM
--சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
சிவகாசி: சிவகாசி அச்சங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் விஜய் 21. இவர் அதே பகுதி தெருவை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமி கர்ப்பமானார். ஊர் நல அலுவலர் மணிமாலா புகாரில் மகளிர் போலீசார் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பெண் தொழிலாளி பலி
சாத்துார்: சாத்துார் சின்னக் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மதுரை வீரன் மனைவி மாரியம்மாள், 58. அப்பகுதியில் உள்ள ரமேஷ் பயர் ஒர்க்ஸில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு பயர் ஒர்க்ஸ்க்கு வேலைக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்தார். சாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி மாயம்
சாத்துார்: சிவகாசி பள்ளப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
