/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ்காரர் மனைவியிடம் மோசடி செய்தவர் கைது
/
போலீஸ்காரர் மனைவியிடம் மோசடி செய்தவர் கைது
ADDED : டிச 29, 2024 01:53 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீஸ்காரர் மனைவியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ரமேஷ்குமாரை 37, போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி கணேஷ் குமார். இவர் திருத்தங்கல் போக்குவரத்து பிரிவில் போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி முனீஸ்பாண்டியிடம் 38, ரமேஷ்குமார்,''தனக்கு அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளேன். உங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன்,'' என கூறியுள்ளார்.
அதை நம்பி முனீஸ் பாண்டி, ரமேஷ்குமாருக்கு தெரிந்த ஆமத்துாரைச் சேர்ந்த திவ்யலட்சுமி வங்கிக்கணக்கிலும், நேரிலும் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கித்தராததால் பணத்தை கேட்ட முனீஸ்பாண்டியை ரமேஷ் குமார் கொலை செய்வதாக மிரட்டினார். இதுகுறித்து முனீஸ்பாண்டி புகாரில் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யலட்சுமியை போலீசார் தேடுகின்றனர்.
போலீசார் கூறுகையில், ''ரமேஷ் குமார் பத்திரிகையில் நிருபராக பணிபுரிவதாக கூறுகிறார். அவர் மேலும் பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்,'' என்றனர்.