/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் போலீசிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்
/
பெண் போலீசிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்
ADDED : நவ 25, 2025 02:32 AM
விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட முதல்நிலை போலீஸ் கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இது குறித்து கார்த்திகேயனின் மனைவி, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளித்தார்.
இதனால் கார்த்திகேயனிடம் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். நேற்று முன்தினம் இரவு கிழக்கு ஸ்டேஷனில் பணிமுடித்து விட்டு இரவு 9:00 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சத்திரரெட்டியபட்டி போலீஸ் செக் போஸ்ட்டிற்கு கார்த்திகேயன் வந்தார்.
அங்கு இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்டார். நேற்று காலை கார்த்திகேயனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.

