ADDED : ஜூன் 04, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டி வளையாபதி தெரு முனியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பது நாள் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பெண்கள் கும்மி அடித்து வழிபாடு செய்தனர். எட்டாம் திருவிழாவான நேற்று ஆண்கள் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.