/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையடக்க எக்ஸ்ரே மிஷின்கள்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையடக்க எக்ஸ்ரே மிஷின்கள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையடக்க எக்ஸ்ரே மிஷின்கள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையடக்க எக்ஸ்ரே மிஷின்கள்
ADDED : ஜூலை 07, 2025 03:33 AM
விருதுநகர்: தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையடக்க எக்ஸ்ரே மிஷின்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் துவங்கியது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவிற்கு முன் வரை எக்ஸ்ரே பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனாவின் போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்த எக்ஸ்ரே மிஷின்கள் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே பரிசோதனைகள் எடுக்கப்படுவதில்லை. இதில் பணியாற்றிய ரேடியோகிராபர்களும் அடுத்தடுத்து நடந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றனர்.
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் எக்ஸ்ரே பரிசோதனை அவசியமாகியுள்ளது.
இதையடுத்து கையடக்க எக்ஸ்ரே மிஷின்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கி பரிசோதனைகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இதில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் ரேடியோகிராபர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கையடக்க எக்ஸ்ரே மிஷினில் சிறிய அளவிலான காயங்கள், வலி ஆகியவற்றிற்கான பரிசோதனைகளை எடுத்து கம்ப்யூட்டர் மூலமாக டிஜிட்டல் பிரிண்டாகவும் முடிவுகளை வழங்க முடியும்.
இதன் பின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள எக்ஸ்ரே மிஷின்களை இடமாற்றம் செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

