ADDED : ஏப் 16, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் ஏப். 17, 18, 19 ஆகிய நாட்களில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நிருபர்கள்,
அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்ர்கள், ரயில்வே ஊழியர்கள், மின், தீயணைப்பு துறையினர், டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோரும், ஏப். 20, 21, 22 ஆகிய நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் ஓட்டு போட அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் தபால் ஓட்டு மையம் ராஜபாளையம்,
ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகங்கள், சிவகாசி சப் கலெக்டர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
