/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துவங்கியது போஸ்டர் பிரசாரம் கேள்விகளை வீசிய பா.ஜ.,
/
துவங்கியது போஸ்டர் பிரசாரம் கேள்விகளை வீசிய பா.ஜ.,
துவங்கியது போஸ்டர் பிரசாரம் கேள்விகளை வீசிய பா.ஜ.,
துவங்கியது போஸ்டர் பிரசாரம் கேள்விகளை வீசிய பா.ஜ.,
ADDED : பிப் 12, 2026 05:58 AM

விருதுநகர்: விருதுநகரில் பா.ஜ., சார்பில் போஸ்டர் பிரசாரம் துவங்கி உள்ளது. நகரின் உட்கட்டமைப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ள நிலையில் இதை மர்ம நபர்கள் சிலர் கிழித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் விருதுநகரில் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். கட்சி ஆலோசனைக் கூட்டங்கள், மேலிட பொறுப்பாளர்கள் வருகை போன்றவை தினசரி நடக்கின்றன.
அதே போல் ஆளுங்கட்சியான தி.மு.க.,வை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்து கின்றன. மக்களுக்காக கேள்வி கேட்க போஸ்டர் ஒட்டும் நுதன பிரசாரத்தை பா.ஜ., கையில் எடுத்து உள்ளது.
முதன் முதலாக தேர்தல் பிரசார போஸ்டர்களை சுயேச்சை யாக நிற்கவுள்ள கீர்த்தனா ஒட்டி, அது மக்கள் மத்தியில் பேசு பொருளானது.
அதே போல், விருது நகர் பா.ஜ., சார்பில், நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு, சாலைகளா, மரணக் குழிகளா சீர்கெட்டு கிடக்கும் விருதுநகரின் உட் கட்டமைப்பு, ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி, அவதியில் விருதுநகர், மக்கள் சிந்திப்பீர், என ஒட்டி யுள்ளனர்.
விருதுநகர் நகராட்சி ஆங்காங்கே தோண்டி போட்டு மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. இது போன்ற எதிர்க்கட்சிகளின் போஸ்டர்களால் மக்கள் ஆசு வாசம் அடைகின்றனர். இதை பிடிக்காத சிலர் இந்த பா.ஜ., போஸ்டர்களை கிழித்துள்ளனர்.

