தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 11, 2026 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 10:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ''தமிழகத்தில் நடக்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட கற்றல் சாரா பணிகளில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலப் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மேற்பார்வையாளராக முதுகலை ஆசிரியர்களை பயன்படுத்துவதற்காக ஆணைகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

கலெக்டர் தலைமையின் கீழ் தனி அலுவலர் நியமித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் ஏற்படுத்தி இதற்கான பணிகளைமாவட்டங்களில் செய்து வருகின்றனர். முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக முதுகலை ஆசிரியர்களின் பட்டியல்கள் வாங்கப் பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் மேல்நிலை பள்ளி மாணவர்களின் சூழல், கற்றல் கற்பித்தல், கடும் பாடச் சுமை, உயர்கல்விக்கு கல்லுாரிக்கு அனுப்ப வேண்டிய எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டிய கற்றல் கற்பித்தல் போன்ற பணிகளைபள்ளிகளில் செய்ய விடாமல், கற்றல் சாராப்பணிகளில் ஈடுபடுத்துவதால் பள்ளிச் சூழலில் பல்வேறு விதமான எதிர்மறை நிகழ்வுகள், சரியான கல்விச் சூழல் இல்லாத நிலை உருவாகிவிடும்.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பதை பள்ளிக்கல்வி துறைக்கும், கலெக்டர் அலுவலகங்களுக்கும், மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு துறைக்கும் வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில்பள்ளிகளில் பாடம் நடத்த விடுங்கள். மற்ற பணிகளில் ஈடுபட மாட்டோம்என்ற அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்கு முடிவெடுக்க வேண்டி இருக்கும். உரிய தீர்வு எட்டப்படா விட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us