/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டியில் லோடு லாரிகளால் துண்டிக்கப்படும் மின்வயர்கள்
/
கூமாபட்டியில் லோடு லாரிகளால் துண்டிக்கப்படும் மின்வயர்கள்
கூமாபட்டியில் லோடு லாரிகளால் துண்டிக்கப்படும் மின்வயர்கள்
கூமாபட்டியில் லோடு லாரிகளால் துண்டிக்கப்படும் மின்வயர்கள்
ADDED : ஆக 04, 2025 03:45 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் அதிக உயரத்திற்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளால் மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் மின்தடையால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான கூமாபட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், கான்சாபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு வயர்கள் போதிய உயரமின்றி தாழ்வாக செல்கிறது.
இந்நிலையில் இப்பகுதி விளைநிலங்களில் இருந்து தேங்காய், நெல் மூடைகளை அதிக உயரத்திற்கு லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் போது வீட்டு மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே லாரிகள் அதிக உயரத்தில் லோடுகள் ஏற்றி செல்வதை தவிர்க்கவும், தாழ்வாக செல்லும் மின் வயர்களை போதிய உயரத்தில் உயர்த்தவும் மின்வாரியம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.