தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம்

 விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம்

 விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம்


ADDED : டிச 20, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்த மூலதன மானியங்கள் விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது.

ஆண்டு தோறும் 3000 விசைத்தறிகளை நவீனமாக்கும் வகையில் ரூ.30 கோடி நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட ரூ.15 கோடியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.5 கோடி என மொத்தம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us