/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி--
/
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி--
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி--
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி--
ADDED : மே 23, 2025 11:22 PM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் பேண்டேஜ் உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கான கூலி உயர்வு குறித்து நடந்த 5வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 12வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பேண்டேஜ் எனும் மருத்துவ துறை உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததால் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் மே 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்வடிவேல், தொழிலாளர்நலத்துறை அலுவலர் முப்புடாதி, சாத்துார் எம்.எல்.ஏ., ரகுராமன், மாவட்ட கைத்தறி துறை கண்காணிப்பாளர் சுதாகர் முன்னிலையில் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள்,விசைத்தறி உரிமையாளர்கள் உடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில்கடந்த ஒப்பந்தத்தை போல் முதல் ஆண்டுக்கு 13.5 பைசா அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 9 பைசா ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து 12வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்தொடர்கிறது.
கோரிக்கையை வலியுறுத்தி மே 29ம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.