ADDED : செப் 20, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான மின் சிக்கன பயிற்சி முகாம் இன்றும் (செப் 20), நாளையும் (செப். 21) சிவகாசி கூட்டுறவு தொழிற்பேட்டை கூட்ட அரங்கில் நடக்கிறது.
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சரவணன் பயிற்சி அளிக்கிறார். எனவே சிவகாசி, சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டு ஆற்றல் தணிக்கை பயிற்சி பெற்று பயனடையலாம் , என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.