நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில், செம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக செய்முறை பயிற்சி நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். முதல்வர் செல்லத்தாய் பேசினார்.
கல்லுாரியில் உள்ள வேதியியல், இயற்பியல், விலங்கியல் துறைகளின் ஆய்வுக்கூடங்களில் மாணவர்களுக்கு துணைப்பேராசிரியர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். பின் மாணவர்கள் தனித்தனியாக ஆய்வுகள் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளியின் ஆசிரியர் திருக்கண்ணன் நன்றி கூறினார்.

