/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10ம் வகுப்பு தேர்வுக்கு செய்முறை பயிற்சி பதிவு
/
10ம் வகுப்பு தேர்வுக்கு செய்முறை பயிற்சி பதிவு
ADDED : செப் 08, 2025 06:10 AM
விருதுநகர் : அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் ஷகிலாகுமாரி செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 2025 --26 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித்தேர்வர்கள், ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செப். 1 முதல் 19 வரை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவுக்கட்டணம் ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டும்.
பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே செய்முறை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.