ADDED : செப் 06, 2025 04:51 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் காலை 10:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதிகளில் கோயில் பூஜாரிகள் பிரதோஷ வழிபாடு பூஜைகள் நடத்தினர். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்: பிர தோஷத்தை முன்னிட்டு ராஜபாளையம் சுற்று வட்டார சிவன் கோயில்களில் நந்தி பகவானுக்கு வழிபாடு நடந்தது.
தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து நந்தி பகவான் அலங்காரத்தில் காட்சியளித்தார். ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில், சொக்கர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், குருசாமி கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.