ADDED : செப் 12, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கள் விருதுநகர் செந்தி குமார நாடார் கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப் போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதல்வர் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவி களை கல்லுாரி நிர்வாகத் தினர், முதல்வர் சுதா பெரியதாய், உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் பாராட்டினர். கல்லுாரியில் இருந்து 6 மாணவிகள் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகினர்.
