ADDED : செப் 04, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், செப்.5-
ஸ்ரீவில்லிபுத்துாரில் போதிய மழை பெய்து குளங்கள், கண்மாய்கள் நிரம்ப வேண்டி ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் உள்ள படித்துறை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு சந்தனகாப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது.
நகரில் போதிய அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யாத நிலையிலும், வடகிழக்கு பருவமழை துவங்க வேண்டிய நிலையில் அணைகள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் திருமுக்குளம் படித்துறையில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நேற்று காலை வடபத்ரசாயி தலைமையில் சந்தன காப்பு உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதனால் விரைவில் மழை பெய்து தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமென நம்பிக்கை தெரிவித்தனர்.
