/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ADDED : டிச 10, 2024 04:43 AM
நரிக்குடி: நரிக்குடி இருவர்குளம் துணை சுகாதார நிலையம் சார்பாக சாலை இலுப்பைகுளம் அரசு துவக்கப் பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் மீனாள், வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ்குமார் தங்கராஜ், மருத்துவ அலுவலர் இன்பராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீரகம், கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
பொது மருத்துவம், கண், இதயம் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற சிகிச்சை, சுகாதார நலக்கல்வி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மருத்துவ அலுவலர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

