ADDED : ஆக 18, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் 23 ஆண்டுகளாக தற்காலிமாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆக. 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் ஜெகதீஷ்குமார், மாவட்டத்தலைவர் பெருமாள்ராஜ் அரசுப் பணியாளர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜா, பி.எம்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
