தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்


UPDATED : அக் 13, 2026 04:59 PM

ADDED : அக் 13, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:59 PM ADDED : அக் 13, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி நேரு ரோட்டில் குடியிருப்புகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி நேரு ரோட்டில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் இந்த கடை அருகே ரேஷன் கடை, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வரும் நபர்கள் ரேஷன் கடை முன்பாக வைத்து மது அருந்துகின்றனர். இதனை கடந்து தான் மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கும் செல்கின்றனர். மது அருந்தும் நபர்கள் தகாத வார்த்தை பேசிக்கொண்டு அவ்வப்போது சண்டை போடுகின்றனர். இதனால் பெண்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. ரேஷன் கடைக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என அவதிப்படுகின்றனர். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us