ADDED : செப் 18, 2025 06:15 AM
விருதுநகர் : விருதுநகரில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மோடியின் தாயார் ஹீரா பென், பாரதமாதா, வீரமங்கை வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள், சுஷ்மா சுவராஜ் ஆகியோரது நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. பாண்டியன் நகர், அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள பகுதிகளில் ஒன்றிய மண்டல் பொதுச் செயலாளர் குணசீலன், தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்று இனிப்பு வழங்கினர்.
*காரியாபட்டியில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் காரியாபட்டியில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயலாளர் ஆண்டி,கர்னல் பி.பி. பாண்டியன் , நரிக்குடியில் நடந்த விழாவில் முன்னாள் ராணுவ பிரிவு மண்டல தலைவர்கள் அசோக்குமார், கனகவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட தலைவர் சரவண துரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆண்டாள் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் குளத்தை சுத்தம் செய்தனர். மரக்கன்றுகள் நட்டனர். திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.