sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள்.. பறக்குது! அவசியமாகிறது ஓய்வுடன் நேரம் மாற்றம்

/

அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள்.. பறக்குது! அவசியமாகிறது ஓய்வுடன் நேரம் மாற்றம்

அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள்.. பறக்குது! அவசியமாகிறது ஓய்வுடன் நேரம் மாற்றம்

அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள்.. பறக்குது! அவசியமாகிறது ஓய்வுடன் நேரம் மாற்றம்


ADDED : நவ 28, 2025 07:38 AM

Google News

ADDED : நவ 28, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்திலிருந்து இருந்து மதுரைக்கு, பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டபோது வழங்கிய நேர அட்டவணை படி தனியார் பஸ்கள் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டிற்கு போதிய நேரமில்லாமல் அதிவேகத்தில் செல்வதால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனை தவிர்க்க ஒரு டிரிப்பிற்கும், மற்றொரு டிரிப்பிற்கும் ஒரு மணி நேரம் ஓய்வு இருக்கும் வகையில் நேர அட்டவணையை மாற்றி அமைப்பது அவசியமாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டபோது, அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, ராஜபாளையம், உட்பட பல்வேறு நகரங்களுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டது.

அப்போது பல்வேறு நகரங்களில் ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட் மட்டுமே இருந்ததால், தனியார் பஸ்கள் போதிய ஓய்வு நேரத்துடன் இயங்கி வந்தது.

இந்நிலையில் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப் பட்ட நிலையிலும், மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் 2 பஸ் ஸ்டாண்டுகள் உருவான நிலையில், இயங்கும் கி.மீ.தூரம் அதிகரித்ததால் போதிய ஓய்வு நேரமின்றி தனியார் பஸ்கள் அதி வேகத்தில் தற்போது இயங்கிவருகிறது.

பல தனியார் பஸ்களில் முகப்பு விளக்குகளை பகல் நேரத்தில் ஒளிர விட்டபடி, வழித்தடத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு செல்லாமல், ஒரு சில கிராமத்து பஸ் ஸ்டாப்புகளில் நின்று செல்லாமல் அதிவேகத்தில் செல்வதால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.

மதுரைக்கு வரும் அனைத்து வழித்தடங் களிலும் தினமும் ஒரு டூவீலர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் பலருக்கு உயிரிழப்பும், உடல் ஊனமும் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க தனியார் பஸ்கள் ஒரு டிரிப்பிற்கும், மற்றொரு டிரிப் பிறகும் ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் வகையில் நேர அட்டவணையை மாற்றி அமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.






      Dinamalar
      Follow us