/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜூன் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
ஜூன் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 18, 2025 04:10 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரியில் ஜூன் 21ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
இம்முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கல்வி தகுதியோடு தேர்வு செய்ய உள்ளனர். விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றுகளின் நகல், ஆதார் கார்டு ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.
இது முற்றிலும் இலவச சேவை. இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் கூகுள் பார்மில் https://forms.gle/Tc44CyT45YZWMzSh8ஐ பதிவு செய்யலாம், என்றார்.