ADDED : மார் 07, 2024 04:58 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாளை(மார்ச் 8) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரலாம், என்றார்.
