/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாகுபடி தொழில்நுட்பகண்டுபிடிப்புக்கு பரிசு
/
சாகுபடி தொழில்நுட்பகண்டுபிடிப்புக்கு பரிசு
ADDED : செப் 22, 2025 03:24 AM
விருதுநகர் : விருதுநகர் வேளாண் இணை இயக்குனர் சுமதி செய்திக்குறிப்பு:
நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழிற்நுட்ப கண்டுபிடிப்பிற்காக விருது வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் மாநில அளவில் முதல் பரிசு ரூ.2.5 லட்சம், 2வது பரிசு ரூ.1.5 லட்சம், 3வது பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உழவன் செயலியில் தங்களின் பெயரை பதிவு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும்.
போட்டியில் வென்றவர்களை அறிவிப்பது வேளாண்மை இயக்குனர் தலைமையிலான மாநில குழுவின் முடிவு இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.