ADDED : செப் 06, 2026 01:04 AM
அ நிறம் | அளவு
----சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி கே.ஆர்.பி., கலை அறிவியல் கல்லுாரியின் நுண்கலை மன்றத்தின் சார்பாக கே.ஆர்.பி கலைச்சாரல் நடந்தது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தார். நுண்கலை மன்றம் தலைவர் மாரியப்பன் வரவேற்றார்.
செயலாளர் பாலகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் முருகலட்சுமி, பிரித்திகா ஜெனிபர், முனீஸ்வரன், ராஜா மாணவர்களுக்கு பேசினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப் பட்டன.
