தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பிரச்னையும் தீர்வும் செய்தி

பிரச்னையும் தீர்வும் செய்தி

பிரச்னையும் தீர்வும் செய்தி


UPDATED : அக் 30, 2026 05:12 PM

ADDED : அக் 30, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:12 PM ADDED : அக் 30, 2026 05:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துாரில் ரயில்வே கிராசிங்கில் பாலம் அமைக்காததால் அல்லல்

*தினம் தினம் அவஸ்தை படும் 18 கிரம மக்கள்

சாத்துார்: சாத்துாரில் ரயில்வே கிராசிங்கில் பாலம் அமைக்காததால் அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்டால் 18 கிராம மக்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாத்துார் நென்மேனி, மன்னார் கோட்டை ரோடுகள் சந்திக்கும் பகுதியில் ரயில்வே கிராசிங் உள்ளது.இந்த ரயில்வே கிராசிங்கை கடந்து தான் 18 பட்டி கிராம மக்களும் வாழ வந்தாள்புரம், சாமியார் காலனி, அம்மாபட்டி, சந்தையூர், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் விவசாயிகள் மாணவர்கள் தொழிலாளர்கள் ஆகியோர் சாத்தூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான கிராமப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இந்த ரயில்வே கிராசிங் கடந்து சாத்துார் நகரில் உள்ள பள்ளிகளுக்கு படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

காலை மாலை நேரங்களில் ரயில்கள் கடந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது.தொடர்ச்சியாக ரயில்கள் கடந்து செல்வதால் ரயில்வே கேட் மூடப்படும் நிலை உள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்களும், ,ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகளும் , இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் காத்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அடுத்தடுத்து ரயில்கள் வருவதால் 25 நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுவதுண்டு.

எனவே ரயில்வே கிராசிங் மீது மேம்பாலம் கட்ட வேண்டுமென கிராம மக்களும் நகர் பகுதி மக்களும் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிப்பு வந்த போதும் இன்று வரை இந்த பணி துவங்கப்படாமல் உள்ளது.ரயில்வே மேம்பாலம் இல்லாததால் அரசு ஊழியர்கள் மட்டும் இன்றி மாணவர்களும் விவசாயிகளும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் அவதி

சாத்துார் ரயில்வே பீடர் ரோட்டில் கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.ரயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் முக்குராந்தல் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் முக்குராந்தல் மற்றும் மெயின் ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் மக்களும் அவதிப்படுகிறார்கள்.

சங்கரேஸ்வரன், நகைக் கடை உரிமையாளர். சாத்துார்.

ரயில்கள் பாதி வழியில் நிறுத்தம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும் கோட்டூர் குருசாமி கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் சென்று வருகின்றனர். நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து ஏராளமான லாரிகள் கற்கள் ஏற்றி வருகின்றன. ரயில்வே கிராசிங்கில் நான்கு தண்டவாளங்கள் உள்ளது மிக நீண்ட பகுதியாக உள்ளதால் லாரிகள் கடந்து செல்ல கால தாமதம் ஏற்படுகிறது.இது போன்ற சமயத்தில் ரயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர் அவதிப்படும் நிலை உள்ளது. ரயில்களும் பாதி வழியில் நின்று கிளம்பும் நிலை உள்ளது.

கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்.

தீர்வு

சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்று வரை அதற்கான பூர்வாங்க பணிகள் எதுவுமே நடக்கவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைப்பதற்கான பணிகளை துவங்கி விரைவில் பால ம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் அதற்கான முயற்சியில் ஈடுபட்பால் மட்டுமே மக்கள் படும் அவதிக்கு இதுவே தீர்வாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us