தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்


ADDED : ஆக 16, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி நகரில் முக்கிய ரோடுகளில் கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படு கிறது.

சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன.

சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

தவிர டூவீலர்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.

இந்நிலையில் நகரில் பெரும்பான்மையான முக்கிய ரோடுகள் பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.

இதனால் வாகனங்கள் சென்று வருவது பெரிது சிரமமாகும் உள்ளது.

கீழ ரத வீதி, புது ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பஜார்களில் ஆக்கிரமிப்பினால் ரோடு மிகவும் குறுகலாகிவிட்டது. இந்த ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

திருத்தங்கல் ரோடு, விளாம்பட்டி ரோடு, பைபாஸ் ரோடு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரக் கடைகளால் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியவில்லை.

ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கிய நிலையில் டூ வீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது.

இதனால் பள்ளி நேரங்களில் மக்களும், மாணவர்களும் பெரிதும் அவதிப் படுகின்றனர்.

முனீஸ்பாண்டி, வழக்கறிஞர்: நகரில் பெரும்பான்மையான ரோடுகள் குறுகலாகவே உள்ளது.

இதில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசெல்வராஜ், தொழிலதிபர்: நகரில் கடைகளின் ஆக்கிரமிப்புகள் தவிர டூவீலர் உள்ளிட்ட கார்கள் ரோட்டிலேயே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றது.

இதுகுறித்து போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் நிரந்தர தீர்வு இல்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் போலீசார் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us