தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்


ADDED : செப் 25, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடைமேடையில் கூரை இல்லை, பயணிகள் ஓய்வறை இல்லை

சிரமத்தில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பயணிகள்

சிவகாசி, செப். 26-

இரண்டாவது நடைமேடையில் கூரை இல்லை, பயணிகள் ஓய்வறை அறை இல்லை என சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பல்வேறு பிரச்னைகளால் சிக்கித் தவிக்கின்றது.

சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்னை - செங்கோட்டை, சென்னை - கொல்லம், மதுரை - குருவாயூர், செங்கோட்டை - மயிலாடுதுரை, மதுரை - குருவாயூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி சேவையாகும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்களும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், தாம்பரம் - வடக்கு திருவனந்தபுரம் இடையே வாரம் ஒருமுறை விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி தொழில் நகரம் என்பதால் தினமும் சராசரியாக 3 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தவிர தினமும் விருநகர், மதுரைக்கு கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இங்கு பயணிகள் ஓய்வரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இங்கு காலை மாலை வேலைகளில் ரயில்கள் கிராசிங் ஆவதால் பயணிகள் இரண்டாவது நடைமேடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இரண்டாவது நடைமேடை முழுவதுமே கூரை இல்லை. தவிர கழிப்பறை, குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் தபால் நிலையத்தில் ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி முதன் முறையாக சிவகாசி தபால் நிலையத்தில் 2018 ல் தொடங்கப்பட்டது. இதற்காக தபால் நிலையத்தில் தனி கவுண்டர் திறக்கப்பட்டு, முன்பதிவு பயண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஆறு மாதமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் காலை 8:00 முதல் 11:00 மணி வரையிலும் மற்றும் மாலை 4:00 முதல் 7:00 மணி வரை மட்டுமே முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பயணிகள் வேலை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய முடியவில்லை.

மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டம் 2022 ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷனை இணைத்து பழைய வெள்ளையாபுரம் ரோட்டின் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டாவது நுழைவு வாயில் ஏற்படுத்த வேண்டும். இதனால் வடக்கு பகுதியில் உள்ள பயணிகள் பெரிதும் பயனடைவர்.

தனசேகரன், சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் துணைத் தலைவர், ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது நடைமேடையில் உடனடியாக கூரை அமைக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும். தெரு விளக்குகளும் அமைக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனிற்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் வரும் நேரங்களில் பஸ்கள் இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரயில்கள் வரும் நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும்.

ஆத்தீஸ்வரன், தொழிலதிபர், ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் விற்பனை, பயணிகளின் அதிக பயன்பாட்டினை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரயில்வே ஸ்டேஷனாக மேம்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் முன்பதிவு செய்யும் வசதியை கொண்டு வர வேண்டும்.

தீர்வு : சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அதிகமானோர் பயன்படுத்தினாலும் பஸ் வசதி இல்லாமல் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. ரயில் வரும் நேரங்களில் பஸ்களில் இயக்க வேண்டும். இதனால் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இரண்டாவது பிளாட்பார்மில் கூரை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரும் பட்சத்தில் பயணிகள் சிரமமின்றி இருப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us