நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு, போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ், குற்றவியல் நடுவர் ப்ரீத்தி பிரசன்னா கொடியசைத்து துவக்கினர். ஊர்க்காவல் படை மதுரை மண்டல துணை தளபதி ராம்குமார் ராஜா, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளிகலந்து கொண்டனர்.

