/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு
/
அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு
ADDED : ஜன 13, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா விழுப்பனுாரில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த உரிமையாளர் சுந்தர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்பனுாரில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், சிவகாசி தனி தாசில்தார் திருப்பதி தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு அனுமதி இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து வி.ஏ.ஓ. பாண்டி புகாரில் கிருஷ்ணன்கோவில் போலீசார், ஆலை உரிமையாளர் திருத்தங்கல்லை சேர்ந்த சுந்தர் மீது வழக்கு பதிவு செய்து, 40 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.