/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜன 22, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: -: அருப்புக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில், மூட்டா சார்பாக, அரசாணை எண் 5 ன் , படி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்கிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு மூட்டா கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
ஏற்பாடுகளை கிளைச் செயலாளர் செல்லபாண்டியன், பொருளாளர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

