ADDED : நவ 15, 2024 06:30 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் அருகே பழைய ஏழாயிரம் பண்ணையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசின் அனைத்து துறை அலுவலர்கள் மக்கள் திட்ட முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். ரூ 1.20கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
