ADDED : ஏப் 12, 2025 05:53 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை : மதுரை --- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை பகுதி புதுப்பிக்கும் பணி நடைபெறுவதை நகாய் திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் ரோட்டின் பல பகுதிகளில் சேதமடைந்தும், கிடங்காகவும் மாறியதையடுத்து, தற்போது காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதிகளில் உள்ள சாலைகள் 130 கோடி ரூபாய் நிதியில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. சாலை பணிகளை நேற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) திட்ட இயக்குநர் சிவம் சர்மா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பல பகுதிகளில் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தார்.
