UPDATED : அக் 24, 2026 06:56 PM
ADDED : அக் 24, 2026 06:54 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.12.98 கோடியில் திட்டப்பணிகளை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் கலெக்டர் ஷரண்யா அறி, எம்.எல்.ஏ., செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணாபுரம் ஊராட்சி கண்மாய்பட்டியில் ரூ.30 லட்சத்தில் சமுதாய கூடம், விருதுநகரில் ரூ.4.60 கோடியில் வணிக வரித்துறை அலுவலகம், குல்லுார் சந்தையில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டடம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதில் வணிக வரித்துறை இணை கமிஷனர் கீதா, முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, மாவட்ட நுாலக அலுவலர் செல்வ சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
