ADDED : நவ 25, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் அரசின் பல்வேறு திட்டங்களில் பலனடைந்தவர்களிடம் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.
நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், காலை உணவுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன், மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தகுதியானோருக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைக்க மக்களின் கருத்துகள் பெறுவது முக்கியம்.
இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற 4 பேரிடம் கலந்துரையாடி கருத்துக்கள் கேட்டறிந்தார். சிவகாசி திருத்தங்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரெபேக்காள் என்பவருக்கு மாற்றுத்திறனாளி அட்டை, ரேஷன் கார்டு வழங்கி கலந்துரையாடினார்.