/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
/
கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 04:17 AM

விருதுநகர்: விருதுநகரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கண்ணன் பேசினார். வளாக கிளை தலைவர் கண்ணன் நன்றிகூறினார்.
* ஸ்ரீவில்லிபுத்துாரில் வட்டார இணை ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் சமுத்திர ராஜ் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் தங்க முனியாண்டி வாழ்த்தினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேச சுப்பிரமணி நன்றி கூறினார். திரளான அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.