தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஜாதிச் சான்று கேட்டு காத்திருப்பு போராட்டம்

 ஜாதிச் சான்று கேட்டு காத்திருப்பு போராட்டம்

 ஜாதிச் சான்று கேட்டு காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 24, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

விருதுநகர் சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 50 பேர் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு காட்டு நாயக்கர் (எஸ்.டி.,)ஜாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தாய், தந்தையின் ஜாதி சான்றிதழோடு விண்ணப்பித்திருந்த அவர்களின் மனுக்கள் காரணம் தெரிவிக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நேரில் வந்து முறையிட்டும் ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் 50 பேர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டொரு நாட்களில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் கலைந்து சென்றனர். ஆர்.டி.ஓ., கனகராஜ் கூறியதாவது, உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us